இன்றைய (08.12.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். இன்று வளர்ச்சி அதிகரித்து காணப்படும். உத்தியோக பணியில் நல்ல பலன்கள் உண்டு. உங்கள் மனைவியிடம் அன்பாக பேசுவீர்கள். துணையுடன் வெளியே செல்லும் வாய்ப்பு உண்டு. பணவரவு அதிகமாக இருக்கும். இன்று மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாளில் இலக்குகளை அடைய சற்று கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகமாக வேலை இருக்கும். அதனால் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களது மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை குறைவாக ஏற்படும். தாயின் உடல்நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.
மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமையாது. அதனால் இன்று கவனம் தேவை. உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுங்கள். சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சற்று குறைவாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு நம்பிக்கையான நாள் என்பதால் புதிய முயற்சியில் ஈடுபடலாம். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்களது மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டகரமான பணவரவு காணப்படும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லாததால் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மனைவிடத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சற்று குறைவாக இருக்கும்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோக வேலையில் மிதமான மகிழ்ச்சி காணப்படும். உங்கள் மனைவியிடம் பேசுவதில் தயக்கம் ஏற்படும். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம் : இன்றைய நாளில் நன்மை தீமை கலந்து ஏற்படும். உத்தியோக இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இன்று உங்கள் மனைவியுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு இன்பம் நிறைந்த நாள். உங்களது இலக்குகளில் வெற்றி கிட்டும். பணியிடத்தில் நீங்கள் தனி முன்னேற்றம் அடைவீர்கள். காதலுக்கு உகந்த நாள். உங்களுக்கு அதிகளவு பண வரவு கிட்டும். தைரியம் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். சற்று சவாலான சூழ்நிலை அமையும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை காணப்படும். இன்று நீங்கள் பொறுமையாக அனுசரித்து குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடன் பிறந்தோரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம்.
மகரம் : இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். அதனால் தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். உத்தியோக இடங்களில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். உடற்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றின் மூலமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோக வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். செலவு அதிகமாக இருக்கும். சளித்தொல்லை அல்லது காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று சாதகமான நாளாக இருக்கும் என்பதால் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் இனிமையான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது மகிழ்ச்சி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.