மேஷம் : இன்றைய நாளில் ஆன்மீக முயற்சியில் ஈடுபடுங்கள். இந்நாள் சிறந்ததாக அமைய புதிய வழிகளை காண்பீர்கள். உத்தியோக பணிகளில் கவனம் தேவை. உங்கள் மனைவியிடம் பேசும் பொழுது பொறுமையாக பேசுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகமாக வேலை இருக்கும். உங்களது மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். நிதிநிலைமை குறைவாக ஏற்படும். உங்களின் உடன் பிறந்தோரின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும்.
மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமைவதால் வெற்றிக்கான திட்டங்களை மேம்படுத்தலாம். இன்று நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் மகிழ்ச்சியான நாளாக அமையும். இன்று உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் அன்புடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு நம்பிக்கையான நாள் என்பதால் உங்களுடைய இலக்குகளை எளிமையாக அடைவீர்கள். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று அதிர்ஷ்டகரமான பணவரவு காணப்படும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிம்மம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். உத்தியோக வேலையில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடக்கவும். உங்கள் பணத்தை திட்டமிட்டு கையாள வேண்டும். சளித்தொல்லை அல்லது இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும். உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியமாக இருக்காது.
துலாம் : இன்றைய நாள் மிகவும் நம்பிக்கையான பலவித நன்மைகளை பெறும் நாள். உத்தியோக இடத்தில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். இன்று உங்கள் மனைவியுடன் வெளியே சென்று மகிழ்வீர்கள். பண வரவு அதிகளவு ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று உங்கள் லட்சியங்களை அடைய பொறுமையும் உறுதியும் தேவை. இன்று நீங்கள் புதிய விஷயங்களை கற்க விரும்புவீர்கள். ஆனால் சில காரணங்களால் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பணிகள் அதிகம் இருக்கும். உங்கள் மனைவியிடத்தில் கோபப்பட நேரும். பணவரவு குறைவாக இருக்கும். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
தனுசு : இன்றைய நாளில் உங்களது பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும் என்பதால் அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று நீங்கள் பொறுமையாக அனுசரித்து குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். தொடை வலி ஏற்படும்.
மகரம் : இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். உத்தியோக இடங்களில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படுவீர்கள். உங்களின் லட்சியங்களை அடைய முடியும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோக வேலை வெற்றிகரமாக இருக்கும். உங்கள் துணையுடன் அன்பாக பழகுவீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மீனம் : இன்று துடிப்பான நாளாக இருக்கும் என்பதால் நம்பிக்கையான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது மனஉறுதி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…