இனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.! இதோ வழிமுறைகள்….
குரூப் வீடியோ கால் பேசுவதற்கு ஜி-மெயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வீடியோ கால் பேசிக்கொள்ளலாம்.
கூகுள் அக்கவுண்ட் ஆனா, ஜி-மெயில் மூலமாக தரவுகளை ஒருவருக்கு அவரது ஜி-மெயில் அக்கவுண்ட் நம்பர் மூலமாக அனுப்பிவிடலாம். இதற்கு, அனுப்புவருக்கும், பெறுபவருக்கு ஜி-மெயில் அக்கவுண்ட் இருப்பது கட்டாயம். தற்போது இந்த ஜி-மெயில் அக்கவுண்ட் மூலமாக வீடியோ கால் பேசிக்கொள்ளலாம் என்கிற வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை ஆண்ட்ராய்டு மொபைலில் உபோயகப்படுத்த கூகுள் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி,
முதலில், கூகுள் ஜி-மெயில் அக்கவுண்ட்டை திறக்க வேண்டும்.
ஜிமெயிலை திறந்து, Meeting Tab-ற்கு செல்லவும்.
புதிதாக Meeting ஏற்பாடு செய்ய New Meeting என்கிற தேர்வை தேர்வு செய்யவும். அதில் 3 விருப்பங்கள் வரும்.
அதில் ஏற்கனவே வீடியோ கால் மீட்டிங் உள்ள லிங்க் இருந்தால், அதனை கொண்டு மீட்டிங்கில் சேரலாம். புதியதாக மீட்டிங் ஆரம்பித்தால், அந்த லிங்கை மற்றவர்களுக்கு பதிவு செய்து மீட்டிங்கை ஏற்பாடு செய்யலாம். இல்லையென்றால், மீட்டிங் முகவரி மற்றும் கடவுசொல் கொண்டு மீட்டிங்கிற்கு நுழையலாம்.
இதனை கணினியில் திறக்க,
முதலில் ஜி-மையிலை திறக்கவும்.
Start a meeting என்பதை கிளிக் செய்யவும்.புதிய பக்கம் திறக்கும்.
உங்கள், கேமிரா, மைக்ரோ போன் உள்ளிட்டவைகளின் அனுமதி கேட்கப்படும். அதற்கு அனுமதி அளித்ததும், மீட்டிங் முகவரி மற்றும் கடவுச்சொல் கொண்டு வீடியோ கால் மீட்டிங்கில் இணையலாம்.
அதன் பிறகு புதிய திரையில் மீட்டிங் விபரம் வெளியாகும்.
அதில் நீங்கள் மற்றவர்களை சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு முகவரி சொல் மற்றும், கடவு சொல்லை அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும். பின்னர், மீட்டிங் முடிந்ததும் end call என்பதை கிளிக் செய்யவும்.