எதிர்கால பிரச்சினைகள் தடுக்க.. கொரோனாவின் தோற்றம் முக்கியமானது.. வுஹானிலிருந்து ஆய்வு.. WHO தலைவர்..!
கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்வது முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் டெட்ரோஸ் கூறினார். இது குறித்து WHO தெளிவாக உள்ளது. இதைச் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க எங்களுக்கு உதவலாம். கொரோனாவின் மூலத்தை அறிய நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று டெட்ரோஸ் கூறினார்.
இதற்காக, சீனாவின் வுஹானில் இருந்து ஒரு ஆய்வு தொடங்கப்படும். அங்கு என்ன நடந்தது என்பதைக்கண்டுபிடிக்கப்படும் என அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு இப்போது ஐரோப்பாவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும், 3-4 ஆயிரம் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தாலி, போலந்து, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 700 பேர் உயிர் இழந்து வருகின்றனர். இதுவரை, ஐரோப்பாவின் 48 நாடுகளில் கொரோனா காரணமாக 3.86 லட்சம் பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இறப்புகளில் வட அமெரிக்காவும், ஆசியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளன. வட அமெரிக்காவில், ஒவ்வொரு நாளும் 1500 முதல் 2000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆசியாவில் 1400 முதல் 1800 பேர் ஒவ்வொரு நாளும் உயிர் இழந்து வருகின்றனர்.
கொரோனா தற்போது அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், பிரான்சில் 20 லட்சம் , இத்தாலியில் 7 லட்சமும், பிரேசிலில் 5 லட்சமும், இந்தியாவில் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 6 கோடியே 35 லட்சத்து 89 ஆயிரத்து 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 14 லட்சத்து 73 ஆயிரத்து 927 பேர் இறந்துள்ளனர்.
இதற்கிடையில், ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா அதன் கொரோனா தடுப்பூசியின் கடைசி கட்ட சோதனைக்குப் பிறகு, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இது 95 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒரு நேர்காணலில், மாடர்னாவின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பான்செல் கூறுகையில், தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டு அனைத்தும் சரியாக இருந்தால், 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 20 மில்லியன் டோஸ் அமெரிக்காவில் கிடைக்கும். 2021 க்குள் 50 முதல் 1 பில்லியன் டோஸ் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது.
ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்படும் என தெரிவித்தார். மாடர்னா இந்த தடுப்பூசியை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.