கொரோனாவை எதிர்த்து போராட…, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க…, இந்த ரசம் சாப்பிடுங்க….!
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ரசம் செய்வது எப்படி?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கூறுகையில், ஒவ்வொருவரும் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளக் கூடிய சத்துள்ள உணவுகளை உண்ணுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் நமது வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆரோக்கியமான ரசத்தை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- புளி கரைசல் – ஒரு டீஸ்பூன்
- தக்காளி – 1 நறுக்கியது
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி
- பூண்டு – 4 அல்லது 5
- மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் – 2
- உப்பு – தேவைக்கேற்ப
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- ஹிங் – அரை டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
- கடுகு – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் காய்ந்த மிளகாய் – 2, கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை, மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து பின் அரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து வதக்கவேண்டும்.
அதன் பின்பு புளிக்கரைசல் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குறைந்த பட்சம் ஒரு பத்து நிமிடங்கள் மூடிவைத்து மிதமாக கொதிக்கும்போது இறக்கி விட வேண்டும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கி, அதனை ரசத்தினுள் கொட்ட வேண்டும்.
ரசத்தை இறக்கியவுடன் புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும். அதற்கு மேலாக சிறிதளவு மிளகுத்தூள் தூவினால், மேலும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
நன்மைகள்
நாம் ரசம் தயாரிப்பதற்காக பயன்படுத்துகிற அனைத்து பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளது. புளி, மஞ்சள்தூள், கறிவேப்பிலை ஆகியவை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவையாகும். வெள்ளைப்பூண்டை பொருத்தவரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, வயிற்று சம்பந்தமான பல பிரசச்னைகளை போக்குகிறது.