சனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும்,நடிகருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இதில் யாரையும் பயப்படாமல் தங்களது கருத்துகளை முன் வைப்பவர்கள் என்றால் ஆரி மற்றும் சனம் தான் .அதானாலையே அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது .
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களும் , குடும்பத்தினரும், பிரபலங்களும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சனம் ஷெட்டி நடித்து ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் எதிர்வினையாற்று படத்தின் ஹீரோவும் ,சனமின் நெருங்கிய நண்பருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதில் சனம் ஷெட்டி நேர்மையானவர் என்றும் ,அவர் எப்போதும் இதே போன்று தான் அனைவரிடம் இயல்பாக பழகுவார் என்றும் கூறிய அவர், பாலாஜி சனம் அவர்களை தவறாக பேசியிருந்தாலும் பாலாஜியை வெளியே அனுப்ப வாய்ப்பில்லை . ஏனெனில் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையும் என்பதால் அவரை எலிமினேட் செய்ய மாட்டார்கள் .மேலும் பாலாஜி உண்மையாகவே இப்படி தானா அல்லது போட்டிக்காக இதை எல்லாம் செய்கிறாரா என்பது தெரியவில்லை.இருப்பினும் அவர் தன்னை மாற்றி கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அதே போன்று ஆரி தனது விளையாட்டை சிறப்பாக விளையாடுகிறார் என்றும்,அனிதா சில நேரங்களில் அழுவது பார்வையாளர்களுக்கு எரிச்சலை தூண்டுவதாகவும் , அர்ச்சனா மற்றவர்கள் மீது காட்டும் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…