TNPL:திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்
திருநெல்வேலி : திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், திருவள்ளூர் வீரன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நெல்லையில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த டிராகன்ஸ் அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த அணி 17.5 ஓவரில் வெறும் 83 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் வெங்கடராமன் அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். கங்கா தர் 17, விவேக் 13, ஜெகதீசன் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். வீரன்ஸ் பந்து வீச்சில் ரகில் ஷா 4, சிலம்பரசன் 2, தன்வார், சஞ்சய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வீரன்ஸ் 14.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்து வென்றது. சித்தார்த் அதிகபட்சமாக 37 ரன் எடுத்தார். கேப்டன் அபராஜித் 28 ரன், ராஜன் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும்,லைய்க்கா கோவை கிங்க்ஸ் அணியும் மாலை 7.30 மணியளவில் சென்னை mac மைதானத்தில் மோதுகின்றன.