TNPL Update: திருச்சி வாரியர்ஸை வீழ்த்தியது காரைக்குடி காளை.
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 24-வது ஆட்டத்தில் ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றிப் பெற்றது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 24-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் பாரத் சங்கர் 68 பந்துகளில் 7 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி தரப்பில் சாம், ஷாஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய காரைக்குடி அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
அந்த அணியில் அனிருத்தா ஸ்ரீகாந்த் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள், விஷால் வைத்யா 19 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷாஜன் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் 4-வது வெற்றியைப் பெற்றுள்ளது காரைக்குடி அணி என்பது தகவல்.