திருவாரூர் தொகுதி இடைதேர்தல் வேட்பாளரை அறிவித்தது திமுக…!!!!

திருவாரூர் தொகுதிக்கான இடைதேர்தல் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் திமுக தலைவரும் ,திருவாரூர் தொகுதி எம்.ஏல்.ஏவும் ஆன கருணாநிதியின் மறைவால் அத்தொகுதி காலியாக உள்ளது.இந்நிலையில் நெடுநாட்களாக இடைதேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைரமுருகன், டி.ஆர்.பாலு இவர்களின் முன்னிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அக்கட்சியினரிடையே நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலின் முடிவில் பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024