மாசி பிரம்மோற்சவ விழா- திருத்தணியில் கோலாகலமாக துவங்குகிறது.!
திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவானது வரும் பிப்.27ந் தேதி கோலகலமாக தொடங்குகிறது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவானது ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அவ்வாறு நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வரும்27ந் தேதி விநாயகர் வீதி உலாவுடன் தொடங்குகிறது.அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.அதே போல் மார்ச் 5ந் தேதி தேரோட்டமும், 6ந் தேதி வள்ளி திருக்கல்யாணமும், 8ம் தேதி கொடி இறக்கமும், 9ந்தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியோடு மாசி மாத பிரம்மோற்சவ விழாவானது நிறைவுபெறுகிறது குறிப்பிடத்தக்கது.