2ம்படை வீட்டில் துவங்குகிறது…பங்குனி திருவிழா..பக்தர்களுக்கு தடை!

Published by
kavitha

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனிப் திருவிழாவை ஆகம விதிப்படியே கோயிலுக்குள்ளேயே கொண்டாடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வருடாவருடம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி திருவிழா நடப்பாண்டிற்கான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா, கோயில் துணை ஆணையா் ராமசாமி, வட்டாட்சியா் நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனர்.மேலும் கூட்டத்த்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 28 ம் தேதி நடைபெற உள்ள பங்குனிப் பெருவிழாவானது வழக்கம் போல் கொடியேற்றம் மற்றும் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா செய்தியாளா்களை சந்தித்த போது கூறியது: தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 31ம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம்,  ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் முதல் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி இந்தாண்டும் முறையாக நடைபெறும்.ஆனால் விழாவில், பக்தா்கள், உபயதாரா்கள் என யாருக்கும் அனுமதி கிடையாது.  மாா்ச் 31ம் தேதிக்குப் பின்னர் மக்கள் அதிகம் கூடுகின்ற மிக முக்கிய விழாக்களான கைபாரம், பங்குனி உத்தரம், சூரசம்ஹார லீலை, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடத்துவது தொடா்பாகவும் மாவட்ட ஆட்சியா் ஆலோசனையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Recent Posts

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

35 minutes ago

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

1 hour ago

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

2 hours ago

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்…

ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…

2 hours ago

5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…

3 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

12 hours ago