2ம்படை வீட்டில் துவங்குகிறது…பங்குனி திருவிழா..பக்தர்களுக்கு தடை!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனிப் திருவிழாவை ஆகம விதிப்படியே கோயிலுக்குள்ளேயே கொண்டாடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருடாவருடம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி திருவிழா நடப்பாண்டிற்கான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா, கோயில் துணை ஆணையா் ராமசாமி, வட்டாட்சியா் நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனர்.மேலும் கூட்டத்த்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 28 ம் தேதி நடைபெற உள்ள பங்குனிப் பெருவிழாவானது வழக்கம் போல் கொடியேற்றம் மற்றும் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா செய்தியாளா்களை சந்தித்த போது கூறியது: தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 31ம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம், ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் முதல் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி இந்தாண்டும் முறையாக நடைபெறும்.ஆனால் விழாவில், பக்தா்கள், உபயதாரா்கள் என யாருக்கும் அனுமதி கிடையாது. மாா்ச் 31ம் தேதிக்குப் பின்னர் மக்கள் அதிகம் கூடுகின்ற மிக முக்கிய விழாக்களான கைபாரம், பங்குனி உத்தரம், சூரசம்ஹார லீலை, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடத்துவது தொடா்பாகவும் மாவட்ட ஆட்சியா் ஆலோசனையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.