எழாவது நாளாக ஆரோக்கிய ஜபயக்ஞம்..திருமலையில் ஒலித்த வேதமந்திரங்கள்

உலக நன்மைக்காக 7வது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் திருமலையில் நடத்தப்பட்டது.
உலக பிரசித்திப்பெற்ற ஏழுமலையான் கோயிலினுள் ரங்கநாயகா் மண்டபத்தில் தென் மாநிலங்களிலிருந்து வந்த வேதபண்டிதா்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த 7 நாள்களாக இணைந்து சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞத்தை நடத்தி வருகின்றனா். இதில் சதுா்வேத பாராயணம் காலை 3 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் பாராயணம் செய்யபட்டு வருகிறது.பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கவும், உலக மக்களின் ஆரோக்கியத்துக்காகவும் திருப்பதி தேவஸ்தானம் ஜபயக்ஞத்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச்., 25ம் தேதி வரை இந்த ஜபயக்ஞம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025