ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் டிண்டர் மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட பல டேட்டிங் செயலிகளை பாகிஸ்தான் தடை செய்துள்ளது என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இந்தோனேசிய ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் சமீபத்தில் நடத்திய ஆய்வில், டிண்டர் மூலம் நாட்டில் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தானின் டிண்டர் பயனர்களில் பெரும்பாலோர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து வந்தவர்கள், பொதுவாக 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மற்ற டேட்டிங் பயன்பாடுகளும் பாகிஸ்தானில் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் டேட்டிங் சந்தையில் Bumble ஆப் புதியதாக இருந்தாலும், பல பாகிஸ்தான் பெண்களுக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் பெண்கள் அதிகமாக பயன்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாக்கிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” காரணங்களை கொண்டு டேட்டிங் செயலிகளை நீக்க கோரி டிண்டர், கிரைண்டர், டேக், ஸ்கவுட் மற்றும் சேஹி ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், பி.டி.ஏ அனுப்பிய நோட்டீஸிக்கு எந்த நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை.
இதனால், டின்டர் உள்ளிட்ட டேட்டிங் பயன்பாடுகளை சட்டவிரோதமாகவும், ஆபாசமாக இருப்பதாக கூறி பாகிஸ்தான் தடை செய்தது. பாகிஸ்தான் இதே போன்ற காரணங்களுக்காக சமீபத்தில் யூடியூப்பை தடை செய்ய இருப்பதாக அச்சுறுத்திய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்காசியாவில் ஆன்லைன் டேட்டிங் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே லைவ் ஸ்ட்ரீமிங் பிகோ மற்றும் ஆன்லைன் கேமிங் பயன்பாடு PUBG ஐ தடை செய்துள்ளது. டிக்டாக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…