பாகிஸ்தானில் டிண்டர் செயலிக்கு தடை..! பி.டி.ஏ அதிரடி..!

Default Image

ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் டிண்டர் மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட பல டேட்டிங் செயலிகளை  பாகிஸ்தான் தடை செய்துள்ளது என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இந்தோனேசிய ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் சமீபத்தில் நடத்திய ஆய்வில், டிண்டர் மூலம் நாட்டில் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தானின் டிண்டர் பயனர்களில் பெரும்பாலோர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து வந்தவர்கள், பொதுவாக 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  மற்ற டேட்டிங் பயன்பாடுகளும் பாகிஸ்தானில் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் டேட்டிங் சந்தையில் Bumble ஆப் புதியதாக இருந்தாலும், பல பாகிஸ்தான் பெண்களுக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் பெண்கள் அதிகமாக பயன்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாக்கிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ)  ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” காரணங்களை கொண்டு டேட்டிங் செயலிகளை நீக்க கோரி டிண்டர், கிரைண்டர், டேக், ஸ்கவுட் மற்றும் சேஹி ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், பி.டி.ஏ அனுப்பிய நோட்டீஸிக்கு எந்த  நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை.

இதனால், டின்டர் உள்ளிட்ட  டேட்டிங் பயன்பாடுகளை சட்டவிரோதமாகவும், ஆபாசமாக இருப்பதாக கூறி பாகிஸ்தான் தடை செய்தது. பாகிஸ்தான் இதே போன்ற காரணங்களுக்காக சமீபத்தில் யூடியூப்பை தடை செய்ய இருப்பதாக அச்சுறுத்திய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ​​தெற்காசியாவில் ஆன்லைன் டேட்டிங் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே லைவ் ஸ்ட்ரீமிங் பிகோ மற்றும் ஆன்லைன் கேமிங் பயன்பாடு PUBG ஐ தடை செய்துள்ளது. டிக்டாக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்