ரூ.3,200 கோடி ஊழல், ஊழியர்களின் உழைப்பில் அடிக்கும் நிறுவனங்கள்.!
டிடிஎஸ் எனப்படும் வரி, எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும், ஊழியர்களிடம் இருந்து மாத சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும்.
450க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை அரசு கணக்கில் டெபாசிட் செய்யாமல் தங்களது தேவைக்காக பயன்படுத்தி உள்ளன. இதனால் டிடிஎஸ் வரியில் சுமார் ரூ.3,200 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.
இதில் சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த மோசயில் ஈடுபட்டவர்களின் மேல் மூன்று மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலும் அரசியல் கட்சியினருடன்,திரைப்பட நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் தொடர்பில் உள்ளவர்கள். , கட்டமைப்பு, ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும்.
மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு