எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் நபர் உயிரிழப்பு!
எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பாதிப்பிலிருந்து குணமான உலகின் முதல் நபரான திமோதி ரே ப்ரவுன் கேன்சரால் உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த திமோதி ரே ப்ரவுன் ஜெர்மனியில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தொற்று பாதித்த திமோதி ரேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, முற்றிலும் குணமடைந்தார். மேலும், எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த முதல் நபராக இவர் திகழ்ந்தார். தற்பொழுது அவர் “லூக்கீமியா” எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த திமோதி ரே ப்ரவுன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அவரின் உறவினர் ஒருவர், சமூகவலைத்தளத்தில் தெரிவித்தார்.