சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் அறிமுகம்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதனிடையே உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிமுகம் செய்வது தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிகழ்வு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. ஆனால் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களை ஏற்கனவே திட்டமிட்டப்படி சொன்ன தேதியில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.
தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு தகவல்:
தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி போல்டு 2 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான அறிமுக செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அறிமுக செய்வதில் மாற்றம் ஏதும் இருக்காது என்ற போதும், இது ஆன்லைன் மூலம் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரியஸின் சிறப்பு:
சாம்சங் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடல் கீக்பென்ச் தளத்தில் SM-N986U என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது தெரியவந்தது. மேலும் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் என்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.99,999 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…