அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா செயலியான டிக்டாக்கிற்கு செப்டம்பர் வரை கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார் .
டிக்டாக் செயலிக்கு இந்த ஆண்டு மோசமான காலமாக அமைந்துள்ளது .இந்தியாவில் டிக்டாக் செயலி உட்பட 59 செயலிகளை மத்திய அரசு தடைசெய்துள்ளது .இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் கை தடைசெய்ய டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார் .கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் தடைசெய்யப்படும் என்ற தகவல் வெளியானது,இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கி சமூகவலைதளத்தில் கால்பதிக்க தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக்கை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் முற்றிலுமாக தடைசெய்யப்படும் என்று எச்சரித்துள்ளார் .
டிக்டாக் கை வாங்கும் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருக்க வேண்டும் .அப்படி இருக்கையில் எங்களுக்கு எந்த பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை மேலும் டிக்டாக் கை வாங்கும் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .அடுத்த 6 வாரத்திற்குள் செப்டம்பர் 15 திற்குள் விற்றுவிட வேண்டும் என கெடு விதித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
இந்நிலையில் பைட்டான்ஸ் நிறுவனம் பிரிட்டனில் தலைமையிடத்தை நிறுவுள்ளதாக முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…