பிரபலமான வீடியோ பயன்பாடான டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தும் என்று கூறிய நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் நின்றது. இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்கின் சிறு பங்குகளை வாங்குவதற்காக பைட்டான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி டிக்டாக்கின் அமெரிக்க பெரும்பான்மை பங்குகளை பைட்டான்ஸ் வைத்திருப்பதாகவும், ஆரக்கிள் சுமார் 20 சதவிகித பங்குகளை மட்டும் வைத்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. டிக்டாக்-ஆரக்கிள் ஒப்பந்தம் குறித்த முடிவை அடுத்த 24-36 மணி நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதனால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால் மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைட்டான்ஸ் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை சீனாவின் அரசாங்கத்திற்கு அனுப்பப்படலாம் என கூறி டிக்டாக்கின் அமெரிக்க நடவடிக்கைகளை விற்க அல்லது முற்றிலுமாக நிறுத்த பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவை பிறப்பித்தது.
பின்னர், அமெரிக்க அரசு பைட் டான்ஸுக்கு 90 நாள் காலக்கெடுவை வழங்கியிருந்தது. அமெரிக்காவில் டிக்டாக் தனது வணிகத்தை நடத்துவதற்கு டிக்டாக்கை ஒரு அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்த வேண்டும் என்றும் அல்லது அனைத்து விவரங்களையும் தங்கள் நாட்டிற்குள் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…