ஐந்து இருக்கைகளுடன் வலம் வந்த ஃவோக்ஸ்வாகன் தற்போது ஏழு இருக்கைகளுடன் டிகுவானாக களமிறங்குகிறது….
முன்பு ஐந்து இருக்கைகள் மட்டுமே இருந்த ஃவோக்ஸ்வாகன் வாகனத்தில் தற்போது 7 இருக்கை பெற்று புதிய ஃவோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடல் சந்தையில் களமிறங்கிய்யுள்ளது. இந்த மாடலில், 190 ஹெச்பி பவர்
- 320 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டும் பெற்றதாக வந்துள்ளது.
- இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது.
- முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் இடம்பெற்றுள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள்,
- பனரோமிக் சன்ரூஃப்,
- லெதர் இருக்கைகள்,
- தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கின்றது.
- பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை ஏழு ஏர்பேக்கு,
- ஏபிஎஸ், இஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும்
- பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கொண்டுள்ளது.
- 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்ற புதிய போக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி 7 இருக்கை கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.
- இதன் விலை ரூ.33.12 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது