ஹாங்காங்கில் தனது சேவைகளை நிறுத்தும் டிக்டாக் நிறுவனம்.. இதுதான் காரணம்!
ஹாங்காங்கில் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில், சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டுவந்த நிலையில், அங்கு தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ள காரணம் மற்றும் சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதன் காரணமாக, இந்தியாவில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில், சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டுவந்தது.
இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு காரணமாக, டிக்டாக் நிறுவனம் ஹாங்காங் நாட்டில் தனது சேவையை நிறுத்தபோவதாக தெரிவித்துள்ளது. மேலும், டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.