புனேயில் நடைபெறவுள்ள டிக் டாக் திரைப்பட விழா! இது குறித்து நெட்டிசன்களின் கருத்து இதோ!

Default Image

இன்றைய உலகில் வளர்ந்து வரும் நாகரீக முறைகளால், பல நன்மைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக தீமைகள் ஏற்படுகிறது. இன்றைய இளம் சமூகத்தினரை சமூக வலைத்தளங்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பேஸ் புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் மற்றும் டிக் டாக் என இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்கள் தான் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையாக உள்ளது.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அன்ராய்டு  மொபைலை பயன்படுத்துகின்றனர்.  இன்று டிக் டாக் என்ற செயலி பலரது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த செயலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால், தடைகளை தாண்டி மீண்டும் இந்த செயலி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை அனைவருமே இந்த செயலியில், வீடியோக்களை பதிவிடுகின்றனர். அதிகமான லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தங்களது உயிரை பணையம் வைத்து, ஆபத்தான இடங்களில் இருந்தும் கூட வீடியோக்களை எடுக்கின்றனர்.

இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவாக டிக் -டாக் திரைப்பட விழா புனேவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவை பிரகாஷ் யாதவ் என்பவர் நடத்தவுள்ளார். இந்த விழா குறித்து பிரகாஷ் யாதவ் கூறுகையில், “டிக்-டாக் செயலியில் பலரும் தாங்கள் எடுக்கும் வீடியோக்களை பதிவிட்டு  வருகின்றனர். பல  மாணவர்கள் கல்லூரிக்கு வெளியில் இருந்து வீடியோ  எடுப்பதையும் நான் பார்த்துள்ளேன். இவர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்று தான் இந்த விழாவை ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.

இந்த விழாவில் இந்தி மற்றும் மராத்தி  வீடியோக்கள் மட்டும் தான் ,பரிசீலிக்கப்படும் என்றும், இந்த வீடியோக்களை அனுப்ப வரும் 20-ம் தேதி தான் கடைசி நாள் என்றும் கூறியுள்ளார்.  இவ்விழாவில், சிறந்த காமெடி, குணசித்திர நடிகர்கள், சிறந்த ஜோடிகள், சமுக விழிப்புணர்வு, சுற்றுசூழல் என 12 பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், முதல் பரிசு ரூ.33,333 என்றும், இரண்டாம் பரிசு ரூ.22,222 என்றும் பங்கேற்கும் அனைவர்க்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விழா ஏற்பாடு டிக் – டாக் பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானச் செய்தியாக இருந்தாலும், இவ்விழா பலரின் எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விழா குறித்து பலரும் தங்கள் ட்வீட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்