#ShockingVideo:சற்று முன்…புறப்படுவதற்கு தயாரான விமானத்தில் திடீர் தீ விபத்து- 122 பேரின் நிலை என்ன?..!

Default Image

மேற்கு சீனாவில் ஓடுபாதையில் இருந்து டிவி9833 என்ற விமானம் திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்படவிருந்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திபெத் ஏர்லைன்ஸ் விமானம் சீனாவில் இருந்து திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்படவிருந்தபோது சற்று முன்னர் ஓடுபாதையில் இருந்து இருந்து விலகிய நிலையில் விமானத்தின் இடது பக்கத்தில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.இதனால்,விமானம் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,உடனே விமானத்தின் பின்பக்க கதவில் உள்ள ஒரு வெளியேற்ற ஸ்லைடு வழியாக மக்கள் தப்பி விமானத்திலிருந்து இருந்து இறங்கி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.அதன்படி,113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றும்,சிலர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,இதனையடுத்து,தீ அணைக்கப்பட்டு ஓடுபாதை மூடப்பட்டதாகவும்,தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்