சுமார் 1.2 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்து பூமி மற்றும் சந்திரனை புகைப்படம் எடுத்த தியான்வென் -1.!
கொரோனா வைரஸ், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் மத்தியில் ஜூலை 23 அன்று, சீனா திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை ஆராயும் தனது முதல் செவ்வாய் கிரகமான தியான்வென் -1 விண்கலம் மற்றும் ஆறு சக்கரம் கொண்ட ரோபோ உள்ளிட்டவற்றை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியான்வென்-1 என்று அழைக்கப்படும் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பின் 2 அல்லது 3 மாதங்களுக்கு மேற்பரப்பில் தரையிறங்க முயற்சிக்காது.
China’s first Mars probe beams back a photo of the Earth and the Moon showing the two as small crescents in space, taken 1.2 million kilometres (746,000 miles) away from Earth three days after the Tianwen-1 mission launched https://t.co/KDlOtInUNQ pic.twitter.com/LsXAY32yLT
— AFP news agency (@AFP) July 29, 2020
இந்த இடைப்பட்ட காலத்தில் அதன் மேற்பரப்பில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தியான்வென் -1 பூமியிலிருந்து சுமார் 1.2 மில்லியன் கி.மீ தூரத்தில் இருந்து பூமி மற்றும் சந்திரனின் படத்தை எடுத்துள்ளது என சீனா தேசிய விண்வெளி நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்டிகல் நேவிகேஷன் சென்சார் பயன்படுத்தி இந்த எடுத்ததாக கூறப்படுகிறது.