டி’ஆர்கி ஷார்டின் அவல நிலை : தன்னுடைய செல்ல நாய் கடித்ததால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை….!!!!
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆனா டி’ஆர்கி ஷார்ட் செல்ல நாய் கடித்ததால் கையில் தையல் போடும் நிலைக்கு ஆளானார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 அணியின் அதிரடி இடது காய் பேட்ஸ்மான் டி’ஆர்கி ஷார்ட். இவர் தற்போது உள்ளூர் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வந்தார். ஆர்கி ஷார்ட் ரால்ப் என்ற செல்ல நாயை வளர்த்து வருகிறார். இந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொது, ஆர்க்டி ஷர்டின் இடது கையை ரால்ப் பலமாக கடித்தது.
தையல் போடும் அளவிற்கு கடி பெரியதாக இருந்ததால், சிகிச்சை மேற்கொண்டு தையல் போட்டுள்ளார். இதனால் பர்த்தில் இன்று நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிரான ஆர்கி ஷார்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.