தைராய்டு என்பது கழுத்தில் உள்ள ஒரு வகையான சுரப்பி. இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.
தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாததினால் ஏற்படக்கூடியது ஆகும். இது இரண்டு வகைப்படும். அவை, ஹைப்போதைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் ஏற்படக்கூடியது. ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி அதிக அளவு ஹார்மோன்களை உற்பத்திசெய்தால் ஏற்படக்கூடியது.
அறிகுறிகள்
ஹைப்போதைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு சோர்வு, எடை அதிகரிப்பு, குளிர் உணர்வு, மலச்சிக்கல், தோல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னை ஏற்படும். அதேபோல், ஹைப்பர் தைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு எடை இழப்பு, அதிக இதயத் துடிப்பு, வியர்வை, தூக்கமின்மை, கைகள் மற்றும் கால்களில் நடுக்கம், மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள் தைராயிடு ஹார்மோன்களின் செயல்பாட்டைத் தடுக்க கூடும். இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, முழு கொழுப்பு பால் மற்றும் சீஸ் ஆகியவை இந்த கொழுப்பு நிறைந்த உணவுகள் அடங்கும். அதேபோல், காபி மற்றும் ஆல்கஹால் தைராயிடு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்க கூடும் எனவே இந்த உணவுகளை தடுப்பது நல்லது.
இனிப்பான உணவுகளில் கால்சியம் அதிகமாக காணப்படும் என்பதால், அதிகப்படியான இனிப்பான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சாப்பிடவேண்டிய உணவுகள்
தைராயிடு பிரச்னை உள்ளவர்கள், தைராயிடு ஹார்மோன்கள் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அவசியமானது. எனவே அயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அயோடின் நிறைந்த உணவுகளில் மீன், கடல் உணவு, பால் மற்றும் பால் பொருட்கள் அடங்கும்.
தைராயிடு ஹார்மோன்களின் உற்பத்திக்கு புரதம் தேவைப்படுகிறது. இறைச்சி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் புரதம் நிறைந்த உணவுகளாகும். தைராயிடு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவு முறையை மிகவும் கவனமாக கடைபிடிப்பது அவசியமாகும்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…