அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்..!
வசந்தபாலன் மற்றும் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும்,படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்கள்.
அதனை தொடர்ந்து இந்த படத்தில் தற்போது இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது. படத்திற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Yes it is officially out now. My next after #Sarpatta.Thanks for the opportunity @Vasantabalan1 sir & @UBoyzStudios hope you all like it???? pic.twitter.com/IeF32qgbEN
— Dushara (@officialdushara) February 13, 2021