கொரோனாவுக்கான புதிய மூன்று அறிகுறிகள்.. என்னவாக இருக்கும்?

சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் உலகளவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை. மேலும், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தசை அல்லது உடல் வலிகள், தலைவலி, நாக்கில் சுவை இழப்பு மற்றும் தொண்டை புண் ஆகிய 9 அறிகுறிகளே கொரோனவுக்கான அறிகுறிகள் ஆகும்.
இந்நிலையில், அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் (CDC) மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸுக்கான புதிய மூன்று ஆய்வுகளை கண்டறிந்தது. அது, மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஆகும். தற்பொழுதுள்ள 9 அறிகுறிகளுடன் இந்த மூன்று அறிகுறிகளும் சேர்க்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025