சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன், ஜகமே தந்திரம், ஆகிய மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான மூன்று திரைப்படங்கள்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் படங்களிற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது. மிக சிறந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் திரையரங்குகள் மூடியிருந்த காரணத்தால் அமேசான் பிரேம் போன்ற ஓடிடி இணையத்தில் வெளியானது. குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவான சூரரைப்போற்று ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது.
அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் பிரபல ஓடிடி தலமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஓடிடியில் அதிகம் விற்பனையான 3 தமிழ் திரைப்படங்கள் பட்டியலை பார்க்கலாம், இந்த பட்டியலில் முதல் இடத்தில் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 55 கோடிக்கு விற்பனை யாகியுள்ளது. இரண்டாவதாக அமேசான் பிரேமில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று 42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 26 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…