சூர்யா தயாரிப்பில் ஒரே குடும்பத்திலிருந்து நடிக்கும் மூன்று தலைமுறையினர்.!வேற லெவலா இருக்கும் போலயே.!

Default Image

சூர்யா தயாரிக்கும் படத்தில் ஒரே குடும்பத்திலுள்ள மூத்த நடிகர் விஜயகுமார்,அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகனான அர்னவ் நடிக்கவுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இந்த நிலையில் தற்போது தனது 32-வது படத்தினை மகன் அர்னவ் உடன் இணைந்து நடித்து வருகிறார் .

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் முதல் முறையாக அர்னவ் நடிக்கிறார்.நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் அர்னவின் தந்தையாக அவரது அப்பாவான அருண் விஜயே நடிக்க உள்ளதாக சமீபத்தில் இயக்குனரே தெரிவித்திருந்தார்.முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அருண் விஜய்யின் தந்தையும் , அர்னவின் தாத்தாவும் , தமிழ் சினிமாவின் மூத்த நடிகருமான விஜய குமார் இணைந்துள்ளதாக இயக்குநர் சரவ் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், ஏற்கனவே அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக பகிர்ந்திருந்திருந்தேன் . தற்போது தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களும் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருப்பதாகவும்,அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிக்க சம்மதித்த மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறிய இயக்குனர் ,படத்தில் அவரது கதாப்பாத்திரம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிய பின் இது குடும்பப் படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாப்பத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும், படம் மிக அழகாக உருவாகி வருவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று பேர் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களைடையே அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்