சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்பலம் வீடு திரும்பிய பின்னர் தனக்கு 20க்கும் மேற்பட்ட தருணங்களில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
இவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவியதோடு, பொன்னம்பலம் அவர்களின் இரு குழந்தைகளின் படிப்பு செலவையும் கமல்ஹாசன் ஏற்று கொண்டார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிறைய படங்களில் நடித்து சம்பாதித்தும் தனக்கென்று எதுவும் சேர்த்து வைக்கவில்லை. சிறுநீரக பிரச்சினையால் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று தான் மருத்துவ செலவுகளை பார்த்தேன். அப்போது தான் சரத்குமாரின் உதவியை நாடியதாகவும், அவர் பணம் கொடுத்து உதவியதோடு, கமல் சாரும் உதவினார்.
இதே போன்று என்னுடன் நடித்த ரஜினி, விஜய், விக்ரம், லாரன்ஸ் உள்ளிட்ட அனைவரும் தனக்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். தான் மருத்துவ செலவுகளுக்காக போராடிய தருணம் மிகவும் கொடுமை, 200க்கும் மேற்பட்ட தருணங்களில் தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது. மேலும் ஸ்டண்ட் யூனியனில் இருந்து தனக்கு யாரும் உதவவோ, பாரக்கவோ வரவில்லை, அது தனக்கு மிகவும் வருத்தம் தான் என்று கூறியுள்ளார் .
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…