எண்ணமே கடவுள்! எண்ணுங்கள் எண்ணத்தில்
எண்ணமே கடவுள் ஒருவருடைய எண்ணமானது தூய்மையானதாக இருந்தால் அதில் இறைவன் குடிகொள்வான் தேடி செல்லவேண்டாம் காரணம் அவ்வெண்ணமே அவனாக மாறிவிடுவான் அதனை வெளிப்படுத்தும் குரு சீடனின் உணர்வு பூர்ணமான நிகழ்வு
தண்டம் என்பதே அவன் பெயர் இது தாய் தந்தையர் வைத்த பெயரல்ல அவனே அவனுக்காக வைத்துக் கொண்ட பெயர்.சற்று மந்த புத்தி வேறு. தவசீலர் என்பதே அக்குருவின் பெயர்.தண்டம் தினமும் குருவிற்கு பணிவிடைகள் செய்து கொண்டிருப்பான் அவ்வாறு ஒருநாள் அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுகின்றது.அச்சந்தேகத்தினை தீர்த்து வைப்பதற்காக வழி நெடுகிலும் சந்தேகத்தை எழுப்புகிறான் ஆனால் அவன் மனம் திருப்தி அடையக்கூடிய பதிலை யாரும் சொல்லவில்லை.
இச்சந்தேகமானது அவனை நிம்மதியாக இருக்கவிடவில்லை இதனால் தன்னுடைய பணிகளை கவனக்குறைவாக செய்தான்.இனி இதற்கு தீர்வினை அறிந்து கொள்ளவில்லை என்றால் நிச்சயம் என்னால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது என்ற எண்ணமானது அவனுள் மேலிடவே குருவினை நோக்கி அவனுடைய பார்வையானது பாய்ந்தது.அவரை தவிர வேறு யாராலும் இதற்கு தீர்வினை தரமாட்டர்கள் என்று எண்ணிணான்.
ஆனால் குருவோ தன் சீடனின் செயல்களை எல்லாம் கவனித்து கொண்டுத்தான் இருந்தார்.அவன் மனதில் என்ன உள்ளது என்று அறிந்தும் விட்டார் அந்த அறிச்சுவடி நாயகன் ஆனால் தன் சீடனுக்காக காத்துக்கொண்டிருந்தார் அந்தருணமும் நெருங்கவே தவசீலர் தன் சீடனை நோக்கி கரம் உயர்த்தி அழைக்கிறார்.ஆல விழுது போல் வளர்ந்திருக்கும் அந்த தாடிக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் காய்ந்த உதட்டிலோ ஏகந்த புன்னகை மட்டுமின்றி அவனுக்கு உபதேஷிக்கும் சரியான காலம் வந்து விட்டதை எண்ணி அமைதி கலந்த ஆனந்தமும் வெளிப்பட்டது.
சீடன் தன் குருவை நோக்கி வந்தான்.குருவிடம் மலமலவென கொட்டி விடுவோம் என்றவன் மனத்தில் ஒரு சந்தேகம் ஆனால் இதற்கு பலர் பதில் அளித்த போதிலும் என்னவோ மனமானது திருப்தி அடைய மறுக்கிறது. உடனே குரு உன்னுடைய சந்தேகம் தான் என்ன? என்று எதுவும் தெரியாதது போல் கேட்டிடவே சீடன் கர்மா என்கிறார்களே அது என்ன? அதனை ஒருவருடைய எண்ணமா?? தீர்மானிக்கிறது இல்லை கர்மம் தான் எண்ணத்தை தீர்மானிக்கிறதா?? என்று அடுக்கடுக்காக கேட்டான் தண்டம்.
தவசீலரோ சரியான கேள்வி தான் சீடன் கேட்டுருக்கான் என்று எண்ணியவார். இதில தான் உனக்கு சந்தேகம் அப்படித்தானே ஆமா குருவே என்றான் தண்டம்.
நீ கேட்ட 3 கேள்விகளும் முத்துக்கள் போன்றது அதனை ஒருவன் எப்போதும் தன்னுடன் அணிந்து கொண்டால் அவன் வாழ்வு சுகமே! குருவின் வார்த்தைகளை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான் தண்டம்.
சீடனே கர்மத்தை தீர்மானிப்பது ஒருவருடைய எண்ணமே! அதை தான் நாம் மனம் என்கிறோம் அது எண்ணங்களால் நிறைந்தது.ஒருவன் தன் எண்ணத்தை எப்போதும் தெளிந்த நீர் போல் வைத்திருக்க வேண்டும் குழம்பினால் எவ்வாறு பயனற்று போகுமோ அது போல எண்ணமானது நற்சிந்தனை விட்டு நீங்கி தீயதை நாடும்.நீ நல்லவைகளையே நினைத்து கொண்டிருந்தால் அதுவே உன் கர்மாகிறது அதன் பலன் உன்னை வந்தடையும் அதே போல் தீயதை எண்ணிக்கொண்டிருந்தால் அதுவும் கர்மமே அதற்காக பலனும் ஒருவனுக்கு கிட்டும்.ஆகவே நம்முடைய எண்ணமே அனைத்தையும் தீர்மானிக்கும் அதிஅற்புதம் படைத்தது. அவ்வெண்ணத்தின் அடிப்படையில் உருவாகுவது கர்மம் கர்மத்தின் விளைவாக உருவாகுவது விளைவுகள் அது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.இரண்டுக்கும் விடையளித்து விட்டேன் மூன்றாவது பதிலை நீயே கூறு என்று தவசீலர் கூற, கர்மம் எண்ணத்தை தீர்மானிக்கவில்லை எண்ணமே அனைத்தையும் தீர்மானிக்கிறது குருவே அவ்வெண்ணம் அப்பழுக்கற்று இருக்கும் பட்சத்தில் ஆறுமுகனே அடியெடுத்து தண்டத்தை நோக்கி வருவான் என்று மன திருப்தியோடு உரைத்தவனின் பதிலை எண்ணி உள்ளத்திற்குள் ஊற்றுத் தோன்றிய உணர்வை அடைந்தார் குரு…