இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் இங்கிலாந்தில் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனவை ஒழிக்கும் விதமாக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் சில நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இரண்டு டோஸாக குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது இங்கிலாந்து செல்லக்கூடிய இந்திய பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்திய மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சுல்தான், தாய்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் தடுப்பூசி போட்டு இருந்தாலும் அவர்களும் தடுப்பூசி போடப்படாதவர்களாக கருதப்பட்டு பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த புதிய விதிகள் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…