அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸ் பாதிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகிறது.
இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றான ஓமைக்ரான் தொற்றும் அங்கு பரவி வருகிறது. ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனிவரும் குளிர்காலங்களில் உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி எடுத்துக் கொண்டால்தான் நாம் நமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும், நாம் நமது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…