நாமினேஷனில் கடைசியாக உள்ள அந்த மூன்று பேர் .? பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார் .? .

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் நாமினேஷன் லிஸ்டில் சனம், சுரேஷ் மற்றும் சோம் ஆகியோர் உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் நாமினேஷன் லிஸ்டில் இருந்து அர்ச்சனா, ஆரி, பாலாஜி, அனிதா ஆகியோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் . மீதமுள்ள சுரேஷ், சோம் மற்றும் சனம் ஆகியோர் உள்ள நிலையில் சுரேஷ் அவர்கள் மற்ற இருவரின் கைகளை பிடித்து கொண்டு இருக்க மூன்று பேரும் ஒன்றாய் போக முடிவு பண்ணீட்டீங்களா , கை கோர்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். மேலும் வீட்டிலிருந்து வெளியேறும் நபரை கூறும் போது புரோமோ முடிவடைகிறது . ஏற்கனவே சுரேஷ் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த வீடியோ
#BiggBossTamil இல் இன்று.. #Day35 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/43u6OttC1J
— Vijay Television (@vijaytelevision) November 8, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024