நாசமடைந்தது நாட்டு பொருளாதாரம்..உயிரோடு நான் எதற்கு??தண்வாளத்தில் நிதியமைச்சரின் உடல்- ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு-கண்ணீர் வடிக்கும் அமைச்சர்கள்
உலகளவில் பரவி வரும் வைரஸ் உயிரை மட்டும் குடித்து வருகிறது என்றால் மறுபுறம் பொருளாதாரத்தை மிச்சமின்றி கோரமாக குதறிவருகிறது.இதன் எதிரோலியாக ஜெர்மனியில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்நாட்டு நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்நாடு மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியடை ய செய்துள்ளது.
உலகம் முழுவதும் தனது மின்னல் பரவலால் உயிர்களை காவு வாங்கி வருகிறது கொரோனா.இதனால் உயிர்கள் மட்டுமல்ல உலக முழுவதும் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.ஒருபுறம் தொற்று பரவல் என்றால் மறுபுறம் பொருளாதார தலைவழி என்று நாடுகள் பதறியோய் இருக்கின்றன.இந்நிலையில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் அமைந்துள்ள ரயில்வே ட்ராக் அருகே சனிக்கிழமை நள்ளிரவு ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது அது யார் என்று பார்க்கும் போது ஒரு நிமிடம் ஜெர்மனியே ஆடியோய் விட்டது. அவ்வாறு ரயில் முன் தற்கொலை செய்து கொண்டது.இதனை அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்து உள்ளது. மூத்த அமைச்சரான வோல்கர் பெளஃபேர் இதையும் உறுதி செய்துள்ளார். அவருடைய தற்கொலை நாட்டு மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அந்நாட்டு நிதியமைச்சர் தற்கொலை குறித்து மூத்த அமைச்சரான வோல்கர் பெளஃபேர் கூறுகையில் தாமசின் மரணம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இந்த முடிவு நம்ப முடியாததாகவும், துயரத்தில் ஆழ்த்துவதாகவும்,கொரோனா வைரசால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்ய தாமஸ் மிகக்கடுமையாக உழைத்தார்.மேலும் அவர் நிறுவனங்கள், பணியாளர்கள் என இருதரப்பு நலன்களையும் பாதுகாக்கின்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வந்தார். அதே நேரத்தில், கடுமையான மனஉளைச்சலில் அவர் இருந்துள்ளார் என்பதை தற்போது எங்களால் உணர முடிகிறது. அவருடைய இழப்பு ஜெர்மனிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. நாங்கள் துயரத்தில் இருக்கிறோம் என்று வோல்கர் பெளஃபேர் தழுதழுத்த குரலால் வருத்தம் மேலிட நிதியமைச்சர் குறித்து தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றால் ஏற்கனவே மனஉளைச்சலில் உள்ள ஜெர்மணிக்கு தங்கள் நிதியமைச்சர் தாண்வாளத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்துள்ளது.