தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தளபதி 64 திரைப்பட சூட்டிங் பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றுவிடுமாம். அதனை தொடர்ந்து உடனே தனது அடுத்தப்பட வேலைகளில் கவனம் செலுத்த உள்ளார் தளபதி விஜய். அதனால், தற்போது அதற்கான வேலைகளில் தளபதி விஜய் தரப்பு ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் தளபதி 65 திரைப்படத்தை திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், அவர் உதயநிதி ஸ்டாலின் படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அடுத்ததாக வெற்றிமாறன் என கூறப்பட்டது. இவர் தற்போது காமெடி நடிகர் சூரியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி விட்டு, அடுத்ததாக சூர்யாவை இயக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை சூர்யா படம் தள்ளி போனால், வெற்றிமாறன் விஜயை வைத்து படம் எடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதற்கிடையில் தர்பார் பட சூட்டிங்கை முடித்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த கதையை தயார் செய்து வருகிறாராம். ஒருவேளை பிப்ரவரி மாதம் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. விரைவில் தளபதி 65 திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
தளபதி 65 திரைப்படத்தை கண்டிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் என கூறப்படுகிறது. தனுஷின் 44வது படத்தினை அறிவித்தது போல அடுத்ததாக விஜய் படத்தை தயாரிப்பதையும் சன் பிக்ச்சர்ஸ் அதிரடியாக அறிவித்து விடுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் தான் யார் என இன்னும் முடிவாகவில்லை.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…