கூகுள்,பேஸ்புக் ஊழியர்கள் விரும்பினால் இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நாடுகளில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளன. இந்நிலையில், பல நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. இதில் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி கொடுத்து உள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது அதற்கான காலத்தை ஃபேஸ்புக், கூகுள் நீட்டித்துள்ளது . கூகுள் ஜூன் 1-ம் தேதி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறியது. தற்போது வாய்ப்பு இருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதும் ஒரே வீட்டில் வேலை செய்யலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் ,அதேபோல ஜூன் 6-ம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கிய ஃபேஸ்புக் தங்கள் ஊழியர்கள் விரும்பினால் இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை…
விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில்,…
சென்னை : இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து…
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…