உங்களை அதிசயத்தில் ஆழ்த்தும் சூப்பர் மூன்! எப்போது? எங்கே? என்னைக்கு? நம்ம ஊர்ல தெரிய போகுது?
“நிலாசோறு” இந்த வார்த்தையை கேட்ட அனைவருக்குமே தங்களது சிறு வயது நினைவுகள் ஞாபகத்திற்கு வந்திருக்கும். பலவித நினைவலைகள் இருந்தாலும் இந்த நிலாசோற்றின் நினைவை எதனாலும் ஈடுகட்ட முடியாது. பல கவிதைகளை நம்மிடம் இருந்து வரவழைப்பது இந்த நிலா தான்.
பல ஆண்கள் இந்த நிலாவை பெண்களுக்கு ஈடாக எண்ணி என்னென்னவோ கவி பாடுவார்கள். இத்தகைய சிறப்புமிக்க நிலா மிக பெரிய அளவில் உங்கள் கண்ணுக்கு முன் இருந்தால் எப்படி இருக்கும். இந்த கனவை நினைவாக்க இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருந்தால் போதும்!
நிலா!
இந்த ஆண்டின் மிக பெரிய அதிசய நிலா இந்த “சூப்பர் மூன்” தான். இதனை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் ஏதோ மாஜிக் போல தெரியும். ஆனால், இது உண்மையாகவே நடக்க போகிறது. அதுவும் வருகின்ற 10- ஆம் தேதி இரவு நிலவானது பிரம்மாண்ட உருவில் தோன்றும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நேரம் என்ன?
இந்த சூப்பர் மூனை வருகின்ற 19- ஆம் தேதி பெளர்ணமி அன்று சரியாக இரவு 9.30 அளவில் பார்க்க இயலும். இது தான் இந்த ஆண்டின் மிக பெரிய நிலவு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பு என்னவென்றால் இதை நம்மால் வெறும் கண்ணிலே பார்க்க இயலும். இந்த சூப்பர் மூன் சென்ற 2011 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் பிரபலமானது. அதன்பின் தற்போது தான் தோன்ற உள்ளது. ஆகவே இதை மிஸ் பண்ணமா பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே!