செப்டம்பர் மாதம் 6 தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யா நடிக்கும் மகாமுனி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதி கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் காப்பான் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
அதற்கடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துவரும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே தினத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக அக்டோபர் 4ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் அசுரன் திரைப்படம் ரிலீசாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் மாதத்தில் கார்த்தி நடிக்கும்கைதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அனேகமாக கைதி திரைப்படம் அசுரனுடன் ஒரே நாளில் மோத இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து தீபாவளி தினம் அக்டோபர் 27 என்பதால் 25ஆம் தேதி தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படமும், விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாக உள்ளன. அதே நாளில் பார்த்திபன் நடித்து வரும் ஒத்த செருப்பு திரைப்படமும் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் லிஸ்டில் உள்ளது.
டிசம்பர் மாதம் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படமும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…