பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அதன் 10 வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது, வீட்டிற்குள் நடக்கும் புதிய சுவாரஸ்யமான நகர்வுகள் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 10 வது வாரத்தில், தற்போதைய 17 போட்டியாளர்களில் மொத்தம் எலிமினேஷனுக்கு ஐந்து போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா விஜயகுமார் வெளியேறினார். இதற்குப் பிறகு, இந்த வார நாமினேஷன் டாஸ்க் பார்வையாளர்களை பெரிதும் கவரவில்லை என்று தெரிகிறது. வரவிருக்கும் நாட்களில் தற்போதைய வாக்குப்பதிவில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும் என்று தெரிந்தவுடன் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது.
காரணம், கனமழை காரணமாக சென்னை மாநகரமே குடிக்க தண்ணீர் மற்றும் உணவு இல்லாமலும் தவித்து வருகிறது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த வகையில், பிக்பாஸ் வீடு என்ன நிலமையில் இருக்கிறது என சிலர் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்ப, சென்னை மக்கள் எலிமினேஷனுக்கு வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது.
தப்பை ஒத்துக் கொள்கிறேன் ஆனா வருத்தப்பட மாட்டேன்! பிக் பாஸ் ஜோவிகா எழுதிய கடிதம்!
இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பின்படி, மிக்ஜாம் புயலின் காரணமாக, பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வார நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, தினேஷ் கோபால்சாமி, மணிச்சந்திரா, நிக்சன் மற்றும் விசித்ரா ஆகியோர் உள்ளனர். இதில் விஜே அர்ச்சனா அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளார், மேலும் விசித்ரா மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளார். இதில், இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வாக்களிப்பு முடிவுகலில் தொடர்ந்து 10 வாரமாக அர்ச்சனா முன்னிலை வகித்து வருகிறார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…