தாய் கடுமையாக திட்டிய போதும் தாழ்வாக பேசிய உங்களது குணம் வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் என கமல் ஷிவானியை புகழ்ந்து கூறியுள்ளார்.
இன்றுடன் 100வது நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்து குறைவான வாக்குகள் பெற்று ஷிவானி வெளியேற்றப்பட்டுள்ளார். 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அவர், தனி மேடையில் சென்று கமலிடம் பேசும்பொழுது முன்னதாக பிரீஸ் டாஸ்க்கில் உங்களது தாயார் வந்து கடுமையாக உங்களை திட்டினாலும் 19 வயது பெண் போல நடந்து கொள்ளாமல் மிக அழகாக அந்த சூழ்நிலையை கையாண்டீர்கள்.
எந்த தவறான மற்றும் கடுமையான வார்த்தைகளையும் உபயோகிக்காமல், ஈரம் கசிந்த வார்த்தைகளை உபயோகித்தீர்கள் எனவும், இந்த குணாதிசயம் உங்களை வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு செல்லும், வாழ்த்துக்கள் இதுபோலவே வெளியிலும் இருங்கள் என ஷிவானியை கமல் புகழ்ந்து கூறியுள்ளார். அதற்கு உங்களது வாயிலிருந்து இந்த வார்த்தையை கேட்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி என ஷிவானி கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…