பணம் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனை அடைவதற்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். உழைப்பின்றி ஊதியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடுமையான உழைப்பு என்பது நிச்சயம் அவசியமானது. ஆனால், சிலர் கடுமையாக உழைத்தும் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காது. இதுபோன்று உழைக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவிற்கே சரியாகின்றதா? இந்த பதிவு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் பணம் தங்குவதற்கு என்னவெல்லாம் எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வியாழக்கிழமை அன்று கடையில் சுத்தமான வாசனை நிறைந்த தாழம்பூ குங்குமம் வாங்கி கொள்ளுங்கள். அதனை வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் கோவிலில் தானமாக கொடுங்கள்.
வீட்டில் சமைப்பதற்கு கோதுமை மாவு அரைப்பீர்கள் என்றால் அதில் 7 துளசி இலைகள், 2 சிட்டிகை குங்கும பூ சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த மாவு வீட்டில் தீராமல் இருக்கும் வரை, உங்கள் வீட்டில் பணமும் தீராமல் இருக்கும்.
அருகில் இருக்கும் கோவிலில் மகாலட்சுமி சன்னிதானம் இருந்தால் தொடர்ந்து 5 வாரம் சென்று வாருங்கள். மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை பூ சூட்டி அர்ச்சனை செய்து வாருங்கள். உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் குறையும். பணவரவு அதிகரிக்கும்.
காமாட்சி அம்மனுக்கு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டுப்புடவை சாற்றி வழிபட்டு வந்தால் உங்கள் கடன் சுமை குறையும். செல்வ வளம் பெருக தொடங்கும்.
நீங்கள் தினமும் பூஜை அறையில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்: காலையில் சுத்தமாக குளித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி அதன் முன் ஒரு விரிப்பில் அமர்ந்து கொண்டு விளக்கை பார்த்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
சித்தர் துதி ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்திசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக.
இந்த மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தால் கூட போதும். அதிகமான முறை உச்சரித்தாலும் தவறில்லை. உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர்ந்து வாழ்வில் செல்வம் தழைத்தோங்க இந்த மந்திரம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…