நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் இதுதான் – அனிதா சம்பத்!

Default Image

நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் நான் தான் எனவும், எனது கருத்துக்கள் சொல்லக்கூடிய விதம் தவறாக இருந்ததும் தான் என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அனிதா சம்பத். கலந்து கொண்ட சில வாரங்கள் இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதன் பின் இவர் அனைவரிடமும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்ததால் இவருக்கு ஹேட்டர்ஸும் அதிகரித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த அனிதா சம்பத் தந்தை கூட அண்மையில் மரணமடைந்த நிலையில், இதன் பின்பு தனது ரசிகர்களின் சில மெசேஜ்க்கு அனிதா சம்பத் தொடர்ச்சியாக பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் ஒரு ரசிகர், நீங்கள் பிக்பாஸில் இருந்து வெளியேறியது சரிதானா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்து ஸ்டோரி ஒன்றை போட்டுள்ள அனிதா, நான் வெளியே வந்ததற்கு காரணம் நான் தான், எனது கருத்து சரியானதாக இருந்தாலும் அதை எடுத்துரைத்த விதம் தவறாக இருந்துள்ளது. எனவே என்னுடைய வெளியேற்றம் சரியானதுதான். அதேசமயம் அந்த வாரம் நான் வெளியே செல்ல வேண்டும் என்பதற்கும் தயாராகத்தான் இருந்தேன். ஓய்வின்றி இருந்தது போலவும் உணர்ந்தேன். ஆனால் நான் வெளியே வந்த பின்பு விளையாடதவர்கள், பாதுகாப்பாக விளையாடுபவர்கள், தங்களது கருத்துக்களை முன் வைக்காதவர்கள் அனைவரும் நல்ல பெயர் வாங்கி இன்னும் உள்ளே இருக்கிறார்களோ என தோணுச்சு எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

anithsambath

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்