ஆஆஆ என்ன அழகுடா.! நம்ம சாண்டியா இது.!
சாண்டி தற்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி .நடன கலைஞராக சினிமாவில் கலக்கி வரும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களின் செல்ல பிள்ளையானார் .
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும் ,த்ரோபேக் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் . வழக்கமாக நடன வீடியோவையும் ,போட்டோவையும் வெளியிடும் சாண்டி தற்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.பெண் போன்று உடை மற்றும் மேக்கப்பிலும் ,சீனாக்காரன் போன்றும் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அசல் பெண்ணாக இவ்வளவு அழகாக இருக்கிறீங்களே என்று கமென்ட் செய்து லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.