உடல் எடையை குறைத்த ரகசியத்தை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் இடையை குறைத்து சில அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் குஷ்பு வா இது என ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.
அதனை தொடர்ந்து அவ்வப்போது தான் எடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடியோவில், தான் உடல் எடை குறைக்க என்ன செய்துள்ளார் என்பதை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியது ” தினமும் நடைப்பயிற்சி செய்வது தான் உடல் எடையை குறைக்க வழி” என கூறியுள்ளார்.
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…