சித்ரா இறப்பதற்கு முன்பு நடந்தது இது தான் – உண்மையாய் உடைத்த சித்ராவின் கணவர் ஹேமந்த் …!

Published by
Rebekal

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள நாசரேத்கோட்டை நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என பல தரப்பினரும் தெரிவித்து வந்த நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் எனவும் பலர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சித்ராவின் தந்தையான ஓய்வு பெற்ற எஸ்.ஐ காமராஜ் அவர்கள் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்த ஹேம்நாத் சித்ராவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருந்தார்.

அதாவது சித்ராவின் மரணத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தான் காரணம் எனவும், அவரால் தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் யார் என்பது பற்றி வெளியில் சொல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 7 பேர் கொண்ட மாபியா கும்பல் சித்ராவின் மரணத்திற்கு காரணம் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது சித்ராவின் மரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஹேம்நாத்.

அதில், எப்பொழுதும் போல இரவு ஒன்றரை மணிக்கு ஷூட்டிங் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்த சித்ரா வழக்கம்போல கலகலப்பாக இல்லாமல் ஒரே இடத்தை பார்த்துக்கொண்டு யோசித்தவாறு இருந்தார். நான் சென்று .பேச முற்பட்டபோது அவள் என்னிடம் பேச விரும்பவில்லை ஏதோ யோசனையில் இருப்பதாக கூறினாள். நான் உடனே வெளியேறி விட்டேன். அவள் குளிக்க சென்றுள்ளாள் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால் 45 நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்காததால் வெளியில் நின்றுகொண்டிருந்த வாட்ச்மேனிடம் சொல்லி ரூமை திறக்க சொன்னேன் எனது காலில் அடிபட்டிருந்ததால் நான் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தேன். அவர் முன்னதாக சென்று கதவை திறந்ததும் அதிர்ச்சியில் நின்றார். நானும் என்ன நடந்தது என்று பார்த்த போது சித்ரா தூக்கிட்ட நிலையில் இருந்தார். விளையாட்டாக ஏதோ செய்கிறாள் போல என்று கயிறையெல்லாம் அவிழ்த்து முதல் உதவி செய்தோம். ஆனாலும் அது பலனளிக்கவில்லை.

இதைத்தான் நான் சொல்ல முயற்சிக்கிறேன் ஆனால் அவரது மரணத்திற்கு காரணம் நான் என்று சொல்கிறார்கள். அதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. அவள் அதை என்னிடம் கூறி இருந்தாள். அவள் இறந்த அன்று அல்ல, அதற்கு சில தினங்களுக்கு முன்பே இது குறித்து என்னிடம் பேசிக் கொண்டு தான் இருந்தாள்.

ஆனால் தற்பொழுது அதை நான் வெளியில் சொல்ல மாட்டேன். நேரம் வரும் பொழுது நிச்சயம் சித்ராவின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து நான் சொல்லுவேன். எனக்கும் அவளுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. ஷூட்டிங்கில் இருக்கும் பொழுது கூட என்னிடம் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டு இருந்தாள். நாங்கள் சந்தோசமாக தான் இருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago