கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி இது தான் என உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இதனை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இதுவரை உலக அளவில், 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் அவர்கள் கூறுகையில், உலக நாடுகள் அனைத்தும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் அடிப்படையான விதிகளை நடைமுறைப்படுத்துவதில், கவனம் செலுத்துவதுதான் நீண்ட கால சவாலான கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கற்பனை செய்யமுடியாத இழப்புகளைத் தவிர்க்க, மறுபடியும் உலக நாட்டின் அரசுகள், பாதிக்கப்பட்டவர்களை கண்டடைதல், தடம் வழி கண்டறிதல், சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ரியான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…