உலக அளவில் தமிழ் திரைப்படங்களில் இதுதான் டாப் வசூல்.! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

Default Image
  • 2019-ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்று பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாக அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.
  • பிகில் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ளது என டிவிட் போட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அன்று வெளியான படம் பிகில் இத்திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி போன்ற ஒரு நட்சத்திர பட்டலாமே நடித்திருந்தனர்.

இந்நிலையில், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலை குவித்து இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார்.

அதில் பிகில் படம் 50 நாட்களை கடந்து உலக அளவில் இந்த வருடம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறிய இந்த நேரத்தில் படத்தை விரும்பி தியேட்டரில் பார்த்த ஒவ்வொருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். பிகில் படம் வெளியானத்துக்கு இதுதான் முதல் அதிகாரபூர்வமான டிவிட் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Imran khan
IPL 2025 - Rohit sharma
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan